இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!

0
278
Vishwaroopam2 movie Preview tamil cinema tamil news

கமல்ஹாசன் இயக்கி நடித்த ”விஸ்வரூபம்” படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் ”விஸ்வரூபம்-2” படத்தின் முன்னோட்டம். (Vishwaroopam2 movie Preview tamil cinema tamil news)

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ”விஸ்வரூபம்-2”.

கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள இந்த படத்தில் நாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடித்துள்ளனர்.

இவர்களுடன் நாசர், ராகுல் போஸ், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அக்லவாட், ரசல் கோஃப்ரி பேங்ஸ், வகீதா ரெஹ்மான், மிர் சர்வார், தீபக் ஜேதி, ஆனந்த் மகாதேவன், ஜுட் எஸ்.வால்கோ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – சனு வர்கீஸ், ஷம்தத் சய்னுதீன், படத்தொகுப்பு – மகேஷ் நாராயன், விஜய் சங்கர், சண்டைப் பயிற்சியாளர் – பிராஹிம் அச்சபாக்கே, லீ விட்டாகர், ஸ்டீபன் ரிக்டர், விஷுவல் எபெக்ட்ஸ் – அஸ்மிதா பாரதி, ஆடை வடிவமைப்பாளர் – கவுதமி, கதை, திரைக்கதை, இயக்கம் – கமல்ஹாசன்.

படம் குறித்து கமல்ஹாசன் பேசும்போது.. :-

”விஸ்வரூபம்-2 படம் தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல. முதல் பாகம் தாமதத்துக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல. தடைகளை வென்று வருகிறது. இதில் நடித்த நாசர், சேகர் கபூர், ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோருக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், காஸ்ட்யூம் பணியை சிறப்பாக செய்து விட்டுபோன கௌதமிக்கும் நன்றி.

விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளோம். ஐந்தாறு டைரக்டர்களும் இதில் நடித்துள்ளனர். எனது அண்ணன் சந்திரஹாசன் அவருக்குள்ள சாராம்சத்தை எனக்குள் இறக்கிவிட்டு போய் இருக்கிறார். அவர் இடத்தை நிரப்ப எனக்கு இப்போது நிறைய சகோதரர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.” என்றார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!

கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி சர்கார் படப்பிடிப்பு இடைநிறுத்தம்..!

ஆடு – மாடுகளைப் போன்று அனைவரையும் பிரித்துக் காட்டுகின்றேன் : பிக்பாஸ் வைஷ்ணவி சவால்..!

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

மீண்டும் தெலுங்கு நடிகரை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி : கெட்ட வார்த்தைகளால் விளாசியதால் பரபரப்பு..!

விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!

Tags :- Vishwaroopam2 movie Preview tamil cinema tamil news