இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளருக்கு நேர்ந்த சோகம்..!!

0
310
England batsman Anderson injured tamil news

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை கோல்ப் விளையாடி மகிழ்ச்சியாக கொண்டாடிய இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஆண்டர்சன் காயமடைந்துள்ளார். (England batsman Anderson injured tamil news)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் இங்கிலாந்து அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். போட்டியில் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக இங்கிலாந்து அணி வீரர்கள் பலரும் மகிழ்ச்சியாக வெளியில் சென்று பொழுதை கழித்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த James Anderson சக பந்துவீச்சாளர் Stuart Broad உடன் இணைந்து கோல்ப் விளையாடி மகிழ்ந்துள்ளனர். ஒரு இடத்தில் Anderson அடித்த பந்து, எதிர்பாராதவிதமாக திரும்பி அவரது முகத்தை பதம் பார்த்துவிட்டு சென்றுள்ளது.

இதனை வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்த Broad தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். இதுகுறித்து இங்கிலாந்து அணி நிர்வாகம், சம்பவத்தில் Anderson பெரிய அளவிற்கு காயம் ஏற்படவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது.

tags :- England batsman Anderson injured

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************