இந்தியன்-2 தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் நட்சத்திரம்..!

0
315
Ajay Devgn debut Indian2 Tamil movie tamil news

ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் “இந்தியன்-2” படக்குழுவில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நயன்தாரா இணையவிருப்பதாக கூறப்படுகிறது. Ajay Devgn debut Indian2 Tamil movie tamil news

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

கமல் நடிப்பில் “விஸ்வரூபம்-2” வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல்களின் பாடல் வரி அடங்கிய வீடியோக்கள் ஏற்கனவே வெளியான நிலையில், அதன் சண்டைக் காட்சிகள் உருவான விதத்தை வீடியோவாக நேற்று வெளியிட்டனர். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் “இந்தியன்-2” படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது.

நயன்தாரா தென்னிந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள்.

சமீபகாலமாக இந்தி நடிகர்களை தமிழில் முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படங்களில் வில்லனாக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் கமலும் அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்.

மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. 1996-ஆம் ஆண்டு வெளியான “இந்தியன்” படத்தின் தொடர்ச்சியாக இந்தியன்-2 உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

tags :- Ajay Devgn debut Indian2 Tamil movie tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

வாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Ajay Devgn debut Indian2 Tamil movie