வசீம் தாஜூடீனின் கொலை விசாரணை தடைப்படுவதற்கு மஹிந்தவும் ரணிலுமே காரணம் – அனுரகுமார குற்றச்சாட்டு

0
445
Anura Kumara said no need protect current government Rajapaksa

(Anura Kumara said no need protect current government Rajapaksa)

மக்கள் விடுதலை முன்னணிக்கு, தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது ராஜபக்சவினரையோ பாதுகாக்கும் எந்த தேவையும் இல்லை என அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்தை பாதுகாத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அனுரகுமார திஸாநாயக்க, மஹிந்த ராஜபக்ச நாட்டின் முன்னாள் ஜனாதிபதி, அவர் வார்த்தைகளை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான தொடர்புகளே பல விசாரணைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளன.

ஷிராந்தி ராஜபக்சவை கைது செய்யப்பட ஏற்பாடுகள் நடந்தன.

மகிந்த ராஜபக்ச, ரணிலை தொடர்புக்கொண்டு அதனை தடுத்து நிறுத்தினார்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை, வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான விசாரணைகள் இடைநடுவில் தடைப்பட்டு நிற்பதற்கு மகிந்த – ரணில் உடன்பாடுகளே காரணம். எமக்கு ரணிலை பாதுகாக்கும் தேவையோ, மகிந்த ராஜபக்சவை பாதுகாக்கும் தேவையோ கிடையாது.

இதனால், முன்னாள் ஜனாதிபதி ஒவ்வொரு இடங்களில் வைத்து குற்றங்களை சுமத்துவதற்கு பதிலாக நானும் அவரும் ஒரே இடத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றை நடத்தவும் தயாராக இருக்கின்றேன்.

அவருக்கு ஆதரவான தொலைக்காட்சிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் கூட இந்த விவாதத்தை வைத்து கொள்ளலாம்.

அப்போது மகிந்தவுக்கு ரணிலுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை வெளியிடவும் தயாராக இருக்கின்றேன் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

(Anura Kumara said no need protect current government Rajapaksa)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites