சுற்றுலாத்துறையில் இயங்கிய இரண்டாம் உலகப் போர் விமானம் விபத்து – 24 பேர் மரணம் (படங்கள்)

0
618
aircraft crash killed 20 people traveling mountain East Switzerland

(aircraft crash killed 20 people traveling mountain East Switzerland)

இரண்டாம் உலகபோரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணித்த 20 பேரும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட குறித்த விமானம் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்டதாகும்.

ஜன்கர்ஸ் நிறுவனம் தயாரித்த விமானமான ஜெ.யு -52 ஹெச்.பி – ஹாட், 17 பயணிகள் மற்றும் மூன்று பேர் அடங்கிய ஊழியர் குழுவினருடன் சனிக்கிழமை மாலையில் பயணத்தை ஆரம்பித்தது.

இந்த விமானத்தை இயக்கிய ஜெ.யு – ஏர் இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை தொடர்புகொள்ள தொலைபேசி சேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெ.யு ஏரின் விமான சேவைகள் அனைத்தும் திகதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை தெளிவாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

”விபத்து நடந்த இடத்தின் நிலைமையை நோக்கும் போது, விமானம் தரையில் மிக அதிக வேகத்தில் செங்குத்தாக மோதியது தெளிவாகியுள்ளது.

மற்றொரு விமானம் அல்லது கேபிள் போன்ற ஏதாவது தடை ஏற்படுத்தும் பொருட்களுடன் இந்த விமானம் மோதியிருக்கலாம்” என சுவிட்சர்லாந்து போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியத்தை சேர்ந்த டேனியல் நெச்ட் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் 42 – 84 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தென் பகுதியான டிசினோவுக்கும் ஜூரிக் அருகேயுள்ள டுபென்டரோஃப் ராணுவ விமான தளத்துக்கும் இடையே இந்த விமானம் பயணித்தது. கடல் மட்டத்தில் இருந்து 8,333 அடி உயரத்தில் இவ்விமான விபத்து நிகழ்ந்துள்ளது.

ஜெர்மனில் தயாரிக்கப்பட்ட இப்பழைய ராணுவ விமானத்தை சுற்றுலாவுக்காக இயக்கி வந்தது ஜெயு – ஏர்.

மத்திய சுவிட்சர்லாந்தில் சனிக்கிழமை நடந்த மற்றொரு விமான விபத்தில் இரண்டு இளம் குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(aircraft crash killed 20 people traveling mountain East Switzerland)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites