1950-1953ம் ஆண்டுகளில் போரில் இறந்த வீரர்களின் உடல்களை கிம் ஒப்படைத்தார்

0
384
President Trump Thanks Kim Jong Un Kind Action tamil news

கடந்த 1950-1953ம் ஆண்டுகளில் வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள் இடையே  கொரிய போர் நடந்தது.  இதில் சீன ஆதரவுடன் வடகொரியாவும், அமெரிக்கா ஆதரவுடன் தென்கொரியாவும் மோதின.  இதில் உயிரிழந்த 55 அமெரிக்க வீரர்களின் உடல்களின் மீதங்களை வடகொரிய அரசு அமெரிக்காவிடம் கடந்த வாரம் ஒப்படைத்தது.President Trump Thanks Kim Jong Un Kind Action tamil news

கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பினை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இதுபற்றிய முடிவானது கையெழுத்திடப்பட்டது.

கொரிய போரில் கலந்து கொண்ட 7,700 அமெரிக்க ராணுவ வீரர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய தலைவர் கிம்முக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளார்.

அதில், எங்களது அன்பு நிறைந்த வீரர்களின் உடல்களின் மீதங்களை திரும்ப ஒப்படைக்கும் பணியை தொடங்கி, உங்களது வாக்கினை நிறைவேற்றியதற்காக கிம் ஜாங் அன் அவர்களுக்கு நன்றி.  இந்த இரக்கமிக்க செயலை செய்ததற்காக நான் அதிக ஆச்சரியமடைந்தேன் என தெரிவித்தார்.

tags :- President Trump Thanks Kim Jong Un Kind Action tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்