காணாமல் போன 150 கரும்புலிகள் இந்தோனேசியாவில் – கண்டுபிடித்தது சிங்கள ஊடகம்

0
1074
Missing 150 Black Tigers indonesia

காணாமல் போனதாக கூறப்பட்ட 150 கரும்புலி உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் தங்கியிருப்பதாகவும், 9 வருடங்களின் பின்னர் இவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் சிங்கள ஊடகமான திவையின செய்தி வெளியிட்டுள்ளது.(Missing 150 Black Tigers indonesia, Tamilnews, Srilanka Tamilnews)

குறித்த கரும்புலி உறுப்பினர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த போது, படகின் இயந்திரம் செயலிழந்த காரணத்தினால் இந்தோனேசியாவில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இந்தோனேசியாவின் வேடான் நகரில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் இந்த கரும்புலி உறுப்பினர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் முகவர் நிறுவனத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கரும்புலிகளுக்கு பிரித்தானியாவில் அகதிகள் பேரவை உதவி செய்து வருதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Missing 150 Black Tigers indonesia,Missing 150 Black Tigers indonesia,Missing 150 Black Tigers indonesia