பிரான்ஸில், ஒரு வார போராட்டத்தின் பின் வழமைக்கு திரும்பிய சேவைகள்!

0
319
France returning normal after week's struggle

ஒரு வாரகால பணிப்பகிஷ்கரிப்பிற்கு பின் இன்று வெள்ளிக்கிழமை மொம்பர்னாஸ் நிலையத்தில் அனைத்து சேவைகளும் வழமைக்குத் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. France returning normal after week’s struggle

கடந்த ஜூலை 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மொம்பர்னாஸ் நிலையத்தில் உள்ள மின் வழங்கியில் திடீரென தீப்பற்றியதால், அனைத்து ரயில்களையும் இயக்க தேவையான மின்சாரம் இல்லாமல் சேவைகள் முற்றாக தடைப்பட்டது.

அதன் பின்னர் சேவைகள் பகுதி பகுதியாக வழமைக்குத் திரும்பியது. SNCF ஏற்கனவே அறிவித்தது போல, வெள்ளிக்கிழமை இன்று அனைத்து சேவைகளும் இயல்புக்குத் திரும்பியுள்ளது.

அதிலும் குறிப்பாக, TGV சேவைகள் இயங்குவதற்கு அதிகூடிய அளவிலான மின்சாரம் தேவைப்பட்டதால், மொம்பர்னாசில் TGVக்கள் வரவோ, புறப்படவோ முடியாமல் இருந்தது.

இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டிருந்தனர். தற்போது, இன்று வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 3) முதல், TGVக்கள் பகுதி பகுதியாக வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து TGVக்கள் உட்பட மொம்பர்னாசின் அனைத்து ரயில் சேவைகளும் வழமைக்குத் திரும்பும் என SNCF அறிவித்துள்ளது.

tags :- France returning normal after week’s struggle

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்