போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?

0
928
Sarath Fonseka friend drug smuggler?

பேலியகொடை பிரதேசத்தில் பிரதான போதைப்பொருள் விநியோகஸ்தரான ‘பொலிஸ்’ என அழைக்கப்படும் அருணஷான்ந்த அத்தநாயக்க என்ற நபர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் வைத்திருந்த போது பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யபட்டுள்ளார். (Sarath Fonseka friend drug smuggler?)

குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நெறுங்கிய ஆதரவாளர் என்றும் அண்மையில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

‘பொலிஸ்’ என்ற இந்த குற்றவாளி சரத் பொன்சேகாவுடன் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ள புகைப்படங்கள் ஊடகங்கள் மூலம் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக அமைச்சர் சரத் பொன்சேகா, தன்னுடன் இருக்கும் பேலியகொடையை சேர்ந்த இளைஞர்கள் பாதாள கோஷ்டி உறுப்பினர்கள் அல்ல எனவும் பொலிஸாரால் இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று போலியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

‘பொலிஸ்’ என்ற இந்த போதைப்பொருள் கடத்தல்காரர் மினுவான்கொடை பிரதேசத்திலுள்ள அவரின் தாய்க்கு சொந்தமான வீட்டில் மறைந்திருந்த போது, பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவவலின்படி இந்த வீட்டை சுற்றிவளைத்து, ஹெரோயின் 08 கிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 2 கிராமும் கைப்பற்றியுள்ளனர்.

பேலியகொடையின் பெரல் சங்க எனும் பாதாள உலகத் தலைவரின் குழுவின் நெருங்கிய நபர் இந்த ‘பொலிஸ்’ எனவும் பேலியகொடை பிரதேசத்தில் நடைபெற்ற பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத் தடுப்பு விசாரனை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sarath Fonseka friend drug smuggler?