Type to search

வவுனியா மருந்தகங்களில் வடமாகாண சுகாதார அமைச்சர் தலைமையில் அதிரடி சோதனை!

Head Line NEWS

வவுனியா மருந்தகங்களில் வடமாகாண சுகாதார அமைச்சர் தலைமையில் அதிரடி சோதனை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் நேற்று நேரடியாகச் சென்று கள ஆய்வில் ஈடுபட்டதன் பிரகாரம் வவுனியாவில் அனுமதி இல்லாத தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவ நிலையங்களில் சோதனைகள் இடம்பெற்றது. Vavuniya Medical Clinics Check North Health Minister Action Tamil News

அதனடிப்படையில் உரிய அனுமதி இன்றி கதிர்வீச்சு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இரு வைத்தியசாலைகள், ஆயுர்வேத மருத்துவம் பயின்று விட்டு ஆங்கில மருந்துகள் வழங்கிய இரு வைத்திய நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.

இந்த கள ஆய்வில் வவுனியாவில் மூன்று தனியார் வைத்திய சிகிச்சை நிலையங்கள் , இரண்டு மருந்தகங்கள், இரண்டு வைத்தியசாலை தரத்தில் உள்ள நிறுவனங்கள் நேரடியாக பார்வையிடப்பட்டது.

மருத்துவ துறையில் சட்ட விரோதமான செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: