கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது

0
1190
Robbery knife point woman gang arrested

கூர்மையான கத்தி மற்றும் ஆயுதங்களைக் காண்பித்து, அச்சுறுத்தி உடமைகளைக் கொள்ளையடித்த 17 வயதுடைய பெண்ணொருவர் உள்ளடங்கிய கொள்ளையர் குழு ஒன்றை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். (Robbery knife point woman gang arrested)

இவர்கள் அத்துருகிரிய மற்றும் பனாகொடை பிரதேசங்களிலுள்ள வீடுகளிலும் விடுதிகளிலும் வசிப்போரை இவ்வாறு பயமுறுத்தி உடமைகளை கொள்ளையடித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பனாகொடை வர்த்தக வலயத்தில் சேவை செய்யும் பாகிஸ்தானியர்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்து, கத்தி மற்றும் ஆயுதங்களை காண்பித்து பயமுறுத்தி உடமைகள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

இந்த முறைப்பாடின் படி விசாரணைகள் மேற்கொண்ட துர்நடத்தை மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சந்தேக நபர்களை நவகமுவை, வந்துரபனுல்ல பிரதேசத்தில் தங்கும் விடுதி ஒன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட பெண் 17 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் கொள்ளையடிக்கும் பொருட்களை இந்தப் பெண் அடகு வைப்பதற்கும் விற்றுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தியுள்ளதோடு, இந்த 17 வயது பெண் இவர்களின் தற்காலிக மனைவியாகவும் இருந்துள்ளார்.

இவர்கள் ஹெரோயின் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் எனவும் இதற்கு முன்னர் வௌ;வேறு குற்றங்கள் தொடர்ப்பாக கைதுச் செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் எனவும் மேலும் இவர்களுக்கு எதிராக ஹோமாகமை நீதிமன்றத்தால் வெளியிட்ட 6 பிடியாணைகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் ஹோமாகமை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Robbery knife point woman gang arrested