போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 பேர் கைது

0
364
06 suspects arrested connection possession drugs Nuwaraeliya police

(06 suspects arrested connection possession drugs Nuwaraeliya police)

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் போதைப் பொருட்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் ஹாவா எலிய, அம்பகஸ்தோவ, கடுகஸ்தோட்ட, நுவரெலியா, பொரலந்த ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கடந்த ஜூலை மாதம் போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த 19 பேர் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வருடம் ஜனவரி மாதம் 04 சந்தேக நபர்களும், பெப்ரவரி மாதம் 03 சந்தேக நபர்களும், மார்ச் மாதம் 01 சந்தேக நபரும், ஜூன் மாதம் 02 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(06 suspects arrested connection possession drugs Nuwaraeliya police)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites