இலங்கைக்கு கடத்த முயன்ற வெடி பொருள்களுடன் ஆறு பேர் கைது – முக்கிய கடத்தல்காரருக்கு பொலிசார் வலைவீச்சு

0
435
Six people arrested explosives trying smuggle Sri Lanka Rameswaram

(Six people arrested explosives trying smuggle Sri Lanka Rameswaram)

இலங்கைக்கு கடத்த முயன்ற வெடி பொருள்களுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபரை இராமேஸ்வரம் பொலிசார் வலைவீச்சி தேடி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு இராமேஸ்வரம் கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு வெடி பொருட்கள் கடத்த இருப்பதாக சிறப்பு குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இராமேஸ்வரம் நகர ஆய்வாளர் பிரபு மற்றும் சார்பு ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படை அமைத்து இரவு முழுவதும் இராமேஸ்வரம் தீவு கடற்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சேரங்கோட்டை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்க்கு இடமாக நின்று கொண்டிருந்த முகமது முஸ்ஸம்மில் (37), பச்சமால் (38), சுப்பிரமணியன் (43), மகாநதி (23), ரவி (33), நம்பு செல்வன் (27) ஆகிய ஆறு பேரை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்க்காக 5600 ஜெலட்டின் குச்சிகள் மறைத்து வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.

அவர்கள் ஆறு பேரையும் கைது செய்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட சுப்பிரமணி என்பவர் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர் வசந்த் என்பவருக்கு கடலில் வெடி வீசி மீன்பிடிப்பதற்க்கு பயன்படுத்த ஜெலட்டின் குச்சிகள் பல வருடங்களாக கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் இலங்கையில் உள்ள மற்ற மீனவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மத்திய உளவுத்துறை, இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு முக்கிய நபரை பொலிசார் ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் தேடி வருகின்றனர்.

(Six people arrested explosives trying smuggle Sri Lanka Rameswaram)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites