வீதியில் தவம் கிடக்கும் மக்கள்- கேப்பாப்பிலவில் 518 ஆவது நாளாக போராட்டம்

0
495
Keppapilavu families continue protesting land grabs 518 days

500 நாள்களை தாண்டி வீதியில் தவம் கிடக்கும் தங்களுக்கு விரைந்து தீர்வு பெற்றுத்தருமாறு புதிதாக நியமனம் பெற்ற பிரதி அமைச்சர்களிடம் கேப்பாப்பிலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(Keppapilavu families continue protesting land grabs 518 days,Tamilnews,Srilanka Tamilnews)

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் 518 ஆவது நாளாக இன்றும் இராணுவ முகாமிற்கு முன்னால் கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாம் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதனை கருத்தில் கொண்டு மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள எமது வன்னி தேர்தல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எம்மை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று எமது பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். எனவே விவசாய பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அங்கஜன் இராமநாதனும் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags: Keppapilavu families continue protesting land grabs 518 days,Keppapilavu families continue protesting land grabs 518 days