மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து

0
728
sltb bus three wheeler accident vavuniya

வவுனியாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில். பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(sltb bus three wheeler accident vavuniya,Tamilnews,Srilanka Tamilnews)

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்றும் அதே திசையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த 9 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஓர் மாணவி ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்தள்ளது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:sltb bus three wheeler accident vavuniya,sltb bus three wheeler accident vavuniya,sltb bus three wheeler accident vavuniya,