தந்தை படுகொலை செய்யப்பட்ட போதும் தமிழ் அகதியை நாடுகடத்தும் அவுஸ்திரேலியா – தாயையும், சகோதரியையும் காணவில்லை

0
497
TAMIL NEWS Australia deports Tamil asylum seeker despite fathers murder

(TAMIL NEWS Australia deports Tamil asylum seeker despite fathers murder)

இலங்கை தமிழ் அகதியொருவரின் தந்தை படுகொலை செய்யப்பட்ட போதிலும் கவி (25) என்ற தமிழ் அகதியை நாடு கடத்துவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவரின் தாயும், சகோதரியும் காணாமல் போயுள்ள நிலையில், அவரது சகோதரர் ஒருவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டார்.

அவரது தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட பின், அவரது தாயார் மற்றும் சகோதரி இந்த ஆண்டு முற்பகுதியில் காணாமல் போனதால், அவரது வழக்கை மறு ஆய்வு செய்ய கடைசி நிமிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

25 வயதான கவி என்ற தமிழ் புகலிட கோரிக்கையாளர், பெர்த்திற்கு அருகிலுள்ள யோகாஹ் ஹில் குடிவரவு தடுப்பு மையத்தில் நான்கு மாதங்களுக்கு காவலில் வைக்கப்பட்டிருந்தார்,

அவரது பயண விசா காலாவதியானமையே இதற்கு காரணமாகும்.

2009 ஆம் ஆண்டில் அவரது சகோதரர் கொல்லப்பட்டதுடன், 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஆறு ஆண்டுகள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்தார்.

இலங்கையில் அவருக்கு ஏற்படக் கூடிய அபாயத்திலிருந்து அவரை காப்பாற்றுவதற்காக கவியின் முழு பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.

(TAMIL NEWS Australia deports Tamil asylum seeker despite fathers murder)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites