‘உயிர் வேண்டுமா ? பைக் வேண்டுமா ? ” சண்டிலிப்பாயில் மிரட்டும் வாள் வெட்டுக்குழு : இராணுவ புலனாய்வாளர்களா ?

0
1023
sword attack jaffna

உயிர் வேண்டுமா? பைக் வேண்டுமா? என கேட்டு சண்டிலிப்பாயில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் புரிந்துள்ளது.(sword attack jaffna, Tamilnews)

சண்டிலிப்பாய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று வீதியால் சென்றவர்களை வழி மறித்து தாக்குதல் தாக்கியும் மிரட்டியும் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

முகங்களை துணிகளால் மூடிக்கட்டியவாறே அட்டகாசத்தில் ஈடுபட்டு இருந்தனர். வீதிகளால் சென்ற வாகனங்கள் மீதும் தாக்குத நடாத்தி உள்ளனர்.

அதன் போது வீதியால் வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை மறித்து , பைக் வேண்டுமா ? உயிர் வேண்டுமா ? என மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றுள்ளனர்.

சண்டிலிப்பாய் இரட்டையர் புலம் வைரவர கோவிலை அண்டிய பகுதி, ஆலங்குளாய் , கல்வளை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 09 மணியளவில் எட்டு மோட்டர் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்டவர்களே அப்பகுதிகளில் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

வர்த்தக நிலையங்களுக்குள், கொள்ளையிடும் வாள் வெட்டுக் கும்பல்கள் – அச்சத்தில் வர்த்தகர்கள்….

வர்த்தக நிலையங்களுக்கு வாள்களுடன் நுழைந்து கொள்ளையிடும் வாள் வெட்டுக்கும்பல்களினால் யாழ்.நகர வர்த்தகர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் எனவும், கொள்ளையர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் யாழ்.வர்த்தக சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

யாழில்.உள்ள வர்த்தக நிலையங்களுக்கு வாள்களுடன் உட்புகும் கொள்ளையர்கள் வாளினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதனால் அச்சத்தில் உறைந்துள்ள வர்த்தகர்கள் இரவு 7 மணிக்கு முன்னரே தமது வர்த்தக நிலையங்களை மூடி விட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் காவற்துறையினர் கொள்ளையர்கள் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு கொள்ளையர்களை விரைந்து கைது செய்யவேண்டும் என கோரியுள்ளனர்.

இதேவேளை எந்தவித அச்சமும் இன்றி யாழ்ப்பாணத்தை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் வாள்வெட்டுக் குழுக்களின் பின்னணியில், அரச புலனாய்வுத் துறை, காவற்துறை, பாதுகாப்பு படையினர் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகங்கள் குடாநாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத யாழ் சமூகசெயற்பாட்டாளர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

குறிப்பாக உலக அளவில் பலம்வாய்ந்த அமைப்பாக விளங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கைப் படையினர் மௌனிக்க வைத்தனர்.

விசேடமாக யாழ் குடா நாட்டில் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவ பிரசன்னத்தையும், கிராமங்கள், நகரங்களை மையப்படுத்தி காவல் நிலையங்களையும் கொண்டுள்ள இலங்கைப் பாதுகாப்பு கட்டமைப்பை மீறி வாள்வெட்டுக் குழுக்கள் மோட்டார் சைக்கிள்களில் சர்வ சாதாரணமாக எப்படி வலம் வர முடியும் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:sword attack jaffna,sword attack jaffna,sword attack jaffna,