இத்தாலியில் பேரிடர் மீட்புப் பணியில் பயன்படும் ரோபோ கண்டுபிடிப்பு

0
298
Italy robot discovery disaster rescue work

பேரிடர் காலங்களில் பயன்படும் வகையில் புதிய ரோபோவை இத்தாலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். (Italy robot discovery disaster rescue work)

இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த ரோபோ, ஊர்ந்து செல்லத்தக்க வகையில் நான்கு கால்களும், மனிதர்கள் பயன்படுத்துவதைப் போன்று இரண்டு கைகளும் கொண்டுள்ளன. இதில் கேமராக்கள், சென்சார், லேசர் லைட் கொண்டு அளவிடும் ஸ்கேனர் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

1.5 மீட்டர் உயரமும் 93 கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோ தற்போது 6 கிலோ எடை கொண்ட செங்கல்லைத் தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் குறுகலான இடங்களிலும் சிக்கியுள்ள கொங்கிறீட், கட்டைகள் உள்ளிட்ட பொருட்களை அறுத்தெடுக்கும் வகையில் சிறிய சக்தி வாய்ந்த ரம்பமும் பொறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் சமயங்களில் மீட்புப் பணியில் இந்த ரோபோவை ஈடுபடுத்துவது குறித்து இத்தாலிய அரசு பரிசீலித்து வருகிறது.

tags :- Italy robot discovery disaster rescue work

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்