மஹிந்தவின் பெயரை நீக்க முயற்சி : பொங்கியெழுந்த அமுனுகம

0
614
mahinda rajapaksa sarath amunugama

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கை நீக்குவதற்கு தான் எதிர்ப்பினை வெளியிடுவதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அந்த பெயரை எவ்வாறு நீக்க முடியும்? நாம் அனைவரும் அவரது அமைச்சரவையில் இருந்தோம். ஏற்கனவே இருக்கும் ஒரு பெயரை நீக்குவது என்பது எவ்வளவு அசிங்கமான வேலை. இருக்கும் ஒரு விடயத்தை நீக்குவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. வேறு எவருக்காவது தமது பெயரை சூட்டவேண்டி அவசியம் ஏற்படின், புதிதாக ஒன்றை நிர்மாணித்து சூட்டிக்கொள்ளட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mahinda rajapaksa sarath amunugama,mahinda rajapaksa sarath amunugama,mahinda rajapaksa sarath amunugama,