ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்

0
1580
nude greaseman homagama

ஹோமாகம பிரதேசத்தின் பலபகுதிகளில் நள்ளிரவில் நிர்வாணமாக கிரீஸ் பேய் சுற்றித் திரிவதாகவும் இதனால் பிரதேச மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(nude greaseman homagama)

ஹோமாகம, பனாகொட, பெலதகொட, கப்புருகொட மற்றும் ரொமியல் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நிர்வாண கிரீஸ் பேய் சுற்றித் திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு 7-10 மணி வரையிலும் அதிகாலை 2-5 மணிவரையிலும் குறித்த மர்ம நபர் சுற்றித் திரிவதாக அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதகாலமாக குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள போதும், சந்தேக நபரை கைது செய்ய முடியவில்லை.

குறிப்பாக பெண்களை பயமுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் சுற்றித் திரியும் காட்சிகள் பிரதேசத்தில் உள்ள சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:nude greaseman homagama,nude greaseman homagama,nude greaseman homagama,nude greaseman homagama