அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!

0
1466
Anandi shashidharan Rishad Bathiudeen Official Relationship

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார். Anandi shashidharan Rishad Bathiudeen Official Relationship

அனந்தி சசிதரன் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயுதீன் இடையிலான அலுவலக நெருக்கம் தொடர்பிலேயே இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சரான அனந்தி சசிதரன் முன்னாள் போராளி எழிலனின் மனைவி என்ற நிலையில் , தற்போது வடக்கு மாகாண அமைச்சராக கொழும்பு நடுவன் அரசுடனான உறவை பேனவேண்டிய கடப்பாடு உண்டு.

இருப்பினும் கடந்த வாரம் தனது தேசிய அடையாள அட்டையை மாற்றுவதற்காக தனது அமைச்சுப் பதவியினை உறுதி செய்து கடிதம் வழங்குமாறு பிரதம செயலாளரை கோரியிருந்தார்.

அவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதமானது அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அலுவலக இலக்க தொலை நகலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அமைச்சர் ரிசாட்டின் அலுவலகத்தில் இருந்து தொலை நகல் அனுப்பும் தேவை தொடர்பிலேயே தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites