அமைதி போராளி இர்பான் ஹாபிஸ் 37 ஆவது வயதில் காலமானார்

0
815
Irfan Hafeez passed away

அமைதியான போராளி என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அழுத்கமை தர்கா நகரை சேர்ந்த சகோதரர் இர்பான் ஹாபிஸ் தனது 37 ஆவது வயதில் காலமானார்.(Irfan Hafeez passed away,Tamilnews)

தர்கா நகரைச் சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்களின் புதல்வரான இர்பான் சிறுவயது முதல் Duchenne Muscular Dystrophy (DMD) என்ற அரியவகை நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ச்சியாக சுமார் 3 தசாப்தங்களாக கட்டிலில் படுத்தவாறு தனது வாழ்வை கழித்த சகோதரர் இர்பான் தனது அறிவாலும், கல்வியில் இருந்த ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும், ஆங்கில மொழியில் மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டிருந்தார்.

Silent Thoughts, Moments of Merriment மற்றும் Silent Struggle என்பன அவரால் வெளியிடப்பட்ட புத்தகங்களாகும்.

1981ம் ஆண்டு பிறந்த இர்பான் ஹாபிஸ் நோய்வாய்ப்பட்டதன் பின்னர் மேற்கொண்ட பல முயற்சிகள் காரணமாக தேசத்திலும் சர்வதேச ஊடகங்களிலும் புகழ்ந்து பேசப்பட்டதுடன் அனைவரும் நேசிக்கின்ற ஒருவராய் மாறினார்.

ஒரு சிறந்த முன்மாதிரியாய் இருந்து இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கும் இர்பான் ஹாபிஸின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9 மணிக்கு தர்கா நகர் பள்ளி மையவாடியில் இடம்பெறும்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Irfan Hafeez passed away,Irfan Hafeez passed away,Irfan Hafeez passed away,