கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை

0
1747
Father gave drugs 07 year old daughter

கேகாலை பகுதியில் கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருப்பதற்காக தனது 7 வயது மகளின் கண்களைக் கட்டி, போதை மாத்திரைகளை பருகச் செய்த தந்தையை கைது செய்வதற்கு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். (Father gave drugs 07 year old daughter)

கேகாலை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் வீனா என்ற சிறுமியை, அவரது தந்தையை தினமும் அவருடைய வாகனத்தில் பாடசாலைக்கு சென்று விடுவது வழக்கமாக இருந்தது.

இந்த நிலையில், சிறுமி வீனாவின் வகுப்பில் கற்கும் மற்றொரு சிறுமியான அகல்யாவை அவரின் தாயார் பாடசாலைக்கு அழைத்து வந்து விட்டுச்செல்வார்.

இதன்போது, வீனாவின் தந்தைக்கும் அகல்யாவின் தாய்க்கும் இடையில் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரின் உறவும் மேலும் பலமானதை தொடர்ந்து வீனாவின் தந்தை அவரின் வாகனத்திலேயே அகல்யாவின் அம்மாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

தினமும் வீனாவை பாடசாலையில் விட்டு அழைத்து வருவதாக கூறிவிட்டுவரும் வீனாவின் தந்தை, அகல்யாவின் அம்மாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதற்கு வீனா தடையாக காணப்பட்டதனால், வீனா அணியும் டையைக் கொண்டு கண்களை கட்டிவிட்டு, வீனாவின் தந்தை அகல்யாவின் தாயுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

வீனாவின் கண்கள் கட்டப்பட்டிருந்த போதிலும், சிறிய துளையில் தந்தையில் அனைத்து அந்தரங்கத்தையும் வீனா பார்த்தும் அதனை பொருட்படுத்தாது கண்டும் காணாதது போன்று இருந்துள்ளார்.

வழக்கமாக நடைபெறும் இந்த செயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. வீனாவின் கண்களை கட்டிவிட்டு போதை மாத்திரைகளை தந்தை பருகச்செய்துள்ளார்.

மயக்கமுற்ற வீனா சில மணித்தியாலங்களின் பின்னரே விழித்துள்ளார். எனினும் நடந்தவற்றை அம்மாவிடம் சொல்லகூடாது என வீனாவின் தந்தை வீனாவிடம் அச்சுறுத்தியுள்ளார்.

வீனாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும் வீனாவின் அம்மாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வீனா விரும்பி உண்ணும் ஒருவகை பிஸ்கட் பைக்கற்றுக்களை வாங்கி கொடுத்து எதுவானாலும் மறைக்காமல் சொல்லுமாறு கேட்டுள்ளார்.

இதன்போது ஒன்றுமில்லை அம்மா என தெரிவித்த வீனா, தனக்கு அதிகமாக பிஸ்கட்டுக்கள் வாங்கிகொடுத்தால் தான் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உடனே மேலும் பல இனிப்பு பண்டங்களை வாங்கி கொடுத்த வீனாவின் தாய் நடந்த அனைத்து விடங்களையும் மகளிடம் கேட்டறிந்துள்ளார்.

இதன்போது, எனது நண்பியின் அம்மாவுடன் அப்பா கதைப்பார்…டையால் எனது கண்களை கட்டிவிடுவார்.. என் நண்பியின் அம்மாவை அப்பா மடியில் அமர வைத்துக்கொள்வார்.

ஏதோ மருந்துகளை குடிக்குமாறு தருவார்… கண் திறக்கும் போது நான் வீட்டில் இருப்பேன்… என்றும் 07 வயதான வீனா தனது அம்மாவிடம் உண்மைகளை கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் வீனாவின் தாய் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து, அவரின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.

ஆனால் அகல்யாவின் தாய் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார், வீனாவின் தந்தையை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Father gave drugs 07 year old daughter