யாழ். மாவட்ட ‘ஏ’ அணி 149 ஓட்­டங்­க­ளால் அபார வெற்றி

0
560
jaffna district 'A' team won

வட­மா­காண துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­தும் 23 வய­துக்­குட்­பட்ட மாவட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் நேற்­று­ முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணி 149 ஓட்­டங்­க­ளால் அபார வெற்­றி­பெற்­றது.(jaffna district ‘A’ team won)

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணியை எதிர்த்து முல்­லைத்­தீவு மாவட்ட அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 9 இலக்­கு­களை இழந்து 238 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக நிசான் 58 ஓட்­டங்­க­ளை­யும், அலன்­ராஜ் 49 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் ரது­சன் 4 இலக்­கு­க­ளை­யும், அஞ்­சே­யன் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

239 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய முல்­லைத்­தீவு மாவட்ட அணி 21.1 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 89 ஓட்­டங்­க­ளுக்­குச் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.

கயன் ஆட்­ட­மி­ழக்­கா­மல் பெற்ற 30 ஓட்­டங்­களே அதி­க­பட்­சம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:jaffna district ‘A’ team won,jaffna district ‘A’ team won,jaffna district ‘A’ team won,