எங்களுடன் இணைந்து செயற்படுங்கள்! சம்பந்தனுக்கு மகிந்த அழைப்பு!

0
628

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் இணைந்து செயற்பட முன்வருமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். Ex President Mahinda TNA Leader Sambanthan Meeting

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தாம் தயாரெனவும் மகிந்த ராஜபக்ச உறுதியாக கூறியுள்ளார்.

சீன இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஷங்ரி லா விடுதியில், நேற்று மாலை வரவேற்பு விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன், கோத்தாபய ராஜபக்ச, சீனத் தூதுவர் செங் ஷியுவான், கபில வைத்தியரத்ன உள்ளிட்டோர் அருகருகே அமர்ந்திருந்து நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச,

சம்பந்தனிடம் விரிவான பேச்சுக்களை நடத்தினேன். எனது ஆட்சியின் போது சீனாவிடம் அதிக கன்களை பெற்று , நாட்டை கடன்சுமைக்குள் தள்ளி விட்டதாக, தற்போதைய ஆட்சியாளர்களுடன் இணைந்து அவரும் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யவே அதிக கடனை பெற்றேன், இப்போது அந்த அபிவிருத்தியும் தடைப்பட்டு விட்டது, இதனை சுட்டிக்காட்ட தவறிவிட்டீர்கள் என்று அவரிடம் கூறினேன்.

எங்களுடன் இணைந்து கூட்டமைப்பு செயற்பட வேண்டும். வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும் என கூறினேன். சம்பந்தனையும் கோத்தாபய ராஜபக்சவையும் அருகருகே அமர்த்திப் பேசி, இணக்கப்பாடான சூழலுக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்தினேன் என கூறியுள்ளார்.

இந்த விடயங்களை இரா சம்பந்தனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites