இலங்கையுடன் சீனா இராணுவ ரீதியில் நெருக்கம்! போர்க்கப்பலையும் வழங்குகிறது!

0
625
China Wish Keep Military Relationship Sri Lanka

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஷங்ரி லா விடுதியில் நேற்று நடைபெற்றது. China Wish Keep Military Relationship Sri Lanka

இந்த நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய், சிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

சிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை முன்னேற்றுவதற்கு சீனாவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் இரண்டு இராணுவங்களும், பயிற்சி, கூட்டுப் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் ஆழமான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.

இரண்டு நாடுகள் மற்றும் இராணுவங்களுக்கு இடையில், நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அணை மற்றும் சாலைத் திட்டத்தின் அபிவிருத்தியைப் பலப்படுத்த சீனா விருப்பம் கொண்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் சிறிலங்கா படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites