தேயிலை கொடுத்து எரிபொருள் வாங்க அரசாங்கம் ஆலோசனை

0
472
government decide export tea Iran import petroleum Lankan latest news

இலங்கை, ஈரானிடம் இருந்து பெறுகின்ற எரிபொருளுக்கு பதிலாக இலங்கையின் தேயிலையை பண்டமாற்று செய்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. government decide export tea Iran import petroleum Lankan latest news

இந்த யோசனையை இலங்கை தேயிலை சபை முன்வைத்துள்ளது.

ஈரான் அணுவாயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த நாடுடனான நிதி சார் கொடுக்கல் வாங்கலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அரசாங்கம் இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் பெரும்பகுதி மத்திய கிழக்கு நாடுகளால் கொள்வனவு செய்யப்படுகிறது.

குறிப்பாக ஈரான் இலங்கை தேயிலையை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்கிறது.

இதனால், இலங்கை கொள்வனவு செய்யப்படுகின்ற எரிபொருளுக்கு நிகரான தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், ஈரானுடனான கொடுக்கல் வாங்கலை தொடர்ந்தும் முன்னெடுக்கும் பொருட்டு இந்த பண்டமாற்று முறை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
government decide export tea Iran import petroleum Lankan latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites