நல்லாட்சி அரசால் தமிழர்களுக்கு நன்மையில்லை! இரா.சம்பந்தன் விசனம்!

0
479
TNA Leader Sambanthan Meets Belgium Political Team

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பெல்ஜியம் நாட்டின் நாடாளுமன்ற நட்புறவு குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற கட்டட தொகுதியிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. TNA Leader Sambanthan Meets Belgium Political Team

இதன்போது கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் , நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பெல்ஜியம் நாடாளுமன்ற குழுவினருக்கு தெளிவுபடுத்தியபோதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டில் தற்போது காணப்படும் அரசியலமைப்பு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல , நாட்டினை புதிய பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் புதிய அரசியலமைப்பு இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்பார்த்த உடனடி நிவாரணங்கள் கிடைக்காமையால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இராணுவம் கைவசப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெற்றுவருவது குறித்தும் பெல்ஜியம் நாடாளுமன்ற குழுவினருக்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குழுவினருக்கு தெளிவுபடுத்திய சம்பந்தன், அவர்களின் உறவினர்கள் தொடர்ந்தும் அன்புக்குரியர்வர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஒரு நிர்க்கதியான நிலைமையில் தொடர்ந்தும் இருக்க முடியாது என விசனம் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites