மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்

0
373
risk suspension GSP Death penalty Sri Lanka

மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி சலுகைகளை இழக்க நேரிடும் என ஐரோப்பிய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (risk suspension GSP Death penalty Sri Lanka)

ஐரோப்பிய சங்கத்தின் இராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள்காட்டி பிரஞ்சு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனையை செயற்படுத்துவதை நிறுத்தக் கோரி ஐரோப்பிய சங்கமும் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா, கனடா ஆகிய நாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியிருந்தது.

ஜீ.எஸ்.பி சலுகைகள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டவரைவுகளுக்கு ஏற்ப அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ஐரோப்பிய சங்கம் கொடுக்கும் வரி சலுகையாகும்.

மனித உரிமைகள் மீறல் மற்றும் பல குற்றச்சாட்டுக்களினால் 2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், அந்த சலுகைகள் மீண்டும் கடந்த மே மாதம் வழங்கப்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரி சலுகைகளினால் ஆண்டுதோறும் இலங்கைக்கு 300 மில்லியன் யூரோ (அதாவது 350 மில்லியன் அமெரிக்க டொலர்) நன்மைகள் கிடைப்பதாக ஐரோப்பிய சங்கத்தின் இராஜாங்க ஆதாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; risk suspension GSP Death penalty Sri Lanka