முதல்முறையாக போலீஸாக மிரட்டும் பிரபுதேவா..!

0
378
Prabhu Deva new movie titled Ponmanickavel

முதல்முறையாக பிரபுதேவா போலீஸாக மிரட்டும் புதிய படத்துக்கு ”பொன்மாணிக்கவேல்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.Prabhu Deva new movie titled Ponmanickavel

ஒரு படத்திலாவது போலீஸாக அடிக்க வேண்டும் என்பது ஹீரோக்களின் அல்டிமேட் ஆசையாக இருக்கும். வளரும் ஹீரோ முதல் சூப்பர் ஸ்டார் வரையில் வெள்ளித்திரையில் மாஸ் காட்டிய கதாபாத்திரங்கள் என்றால் அது போலீஸாகத்தான் இருக்கமுடியும்.

இந்நிலையில், தற்போது இந்த போலீஸ் ஜுரம், டான்சில் கலக்கும் பிரபுதேவா-வையும் விட்டுவைக்கவில்லை. பிரபுதேவாவும் விரைவில் போலீஸ் யூனிபார்ம் அணிய உள்ளார்.

போலீஸ் கேரக்டரில் முதன்முறையாக நடிக்கவிருக்கும் படத்துக்கு பொன் மாணிக்கவேல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து இப் படம் உருவாக்கப்படவுள்ளது. இவர் தமிழகத்தின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் கீழ் நிகரற்ற பணிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப் படத்தில் காவல்துறை உதவி ஆணையராக பிரபுதேவா நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நேமிசந்த் ஜெபக் இப்படத்தை தயாரிக்கிறார். இந்ந படத்தை புதுமுக இயக்குநரும் பிரபுதேவாவின் உதவி இயக்குநருமான முகில் இயக்குகிறார்.இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.

மேலும் ”தேவி”, ”மெர்குரி” உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் பிரபுதேவா தற்போது போலீஸ் கேரக்டரில் அதிரடியாக நடிக்கவுள்ளார். இப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனாதை குழந்தைகள் : கண்ணீர் விட்டழுத பாலாஜி..!

என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Prabhu Deva new movie titled Ponmanickavel