வசிம் தாஜூடீன் கொலை வழக்கு – சீ.சீ.டி.வி. காணொளி அறிக்கைகளை பெறுமாறு சி.ஐ.டிக்கு உத்தரவு

0
404
tamil news wasim thajudeen murder case cctv vidwo hand CID

(tamil news wasim thajudeen murder case cctv vidwo hand CID)

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் மொஹமட் தாஜூடீன் கொலை செய்யப்பட்ட ஹெக்லோக் வீதியில் இருந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி.களில் பதிவான காட்சிகள் அடங்கிய இரண்டு டி.வீ.டிகளை பெற்று ஆய்வுக்குட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவற்றை கணனி அவசர பதில் வழங்குனர் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி லால் டயஸிடம் சமர்பித்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமார, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

தாஜூடீனின் சகோதரியான பாத்திமா அயேஷா தாஜூடீன் கடந்த வருடம் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வழங்கிய டி.வீ.டிக்களை கணனி அவசர பதில் அமைப்பிடம் வழங்கி, அறிக்கை ஒன்றை பெற வேண்டிய தேவை இருப்பதாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்று நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

(tamil news wasim thajudeen murder case cctv vidwo hand CID)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites