மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக அறிக்கை போன்ற போலி ஆவணத்தால் சர்ச்சை??

0
310
tamil news fake statement mahinda rajapaksha future president election

(tamil news fake statement mahinda rajapaksha future president election)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக அறிக்கையை போன்ற போலியான ஒரு ஆவணத்தை தயாரித்து சிலர் சமூக வலைத்தளங்களில் விட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹன் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இனந்தெரியாத சிலர் சமூக வலைத் தளங்களில் நேற்று (17) வௌியிட்டிருந்த போலியான அறிக்கையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் அறிவிக்கவில்லை என இன்று வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்லும் வரை காத்திருந்து, சிலர் இந்த போலி ஆவணத்தை வெளியிட்டுள்ளதாக ரொஹன் வெலிவிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியான போலி ஆவணமானது ´2020 ஜனாதிபதித் தேர்தல்´ என்ற தலைப்பில் வெளியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், 2019 ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதை, மஹிந்த ராஜபக்ஷ முதலில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்ததாகவும் ரொஹான் வெலிவிட்ட கூறியுள்ளார்.

(tamil news fake statement mahinda rajapaksha future president election)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites