மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

0
317
Heroin sales students Security officer arrested

குளியாப்பிட்டிய நகரத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில், மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த, குறித்த பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். (Heroin sales students Security officer arrested)

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றமை தொடர்பில் பெற்றோர்களிடம் இருந்தும் பல தரப்பினரிடம் இருந்தும் தகவல்கள் கிடைத்தன.

இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து நீண்டகாலமாக கண்காணிப்பை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரை பாடசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹெரோயின் போதைப்பொருளுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Heroin sales students Security officer arrested