போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் அரசின் தீவிர முயற்சி வெற்றி – ரணில்

0
337
Ranil Wickremesinghe said efforts regulate drug trade successful

(Ranil Wickremesinghe said efforts regulate drug trade successful)

போதைப்பொருட்களை விநியோகிக்கும் வலைப்பின்னலை முடக்குவதன் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இப்பாகமுவ மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டார்.

போதைப்பொருள் பாவனை காரணமாக இன்று சிறு பிள்ளையும் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகம் முடக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் அன்று போதைப்பொருள் இடை விநியோகஸ்தர்கள் மாத்திரம் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கப்பட்டார்கள்.

பெருமளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சுமத்தினார்.

ஆனால் தமது அரசாங்கத்தில் எந்தவொரு நபரும் தராதரம் பாராது சட்டத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

(Ranil Wickremesinghe said efforts regulate drug trade successful)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites