ஓய்வு பெற்ற நீதியரசர் என்பதனாலேயே விக்கினேஷ்வரனை தெரிவு செய்தோம் – கிழக்கின் முதலமைச்சர் தெரிவே முதலில்….!

0
335
parliamentarian sumanthiran criticize northern province chief minister

கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னரே வடக்கு மாகாணத்திற்கான முதலமைச்சர் தெரிவு இடம்பெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். parliamentarian sumanthiran criticize northern province chief minister

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பிள்ளையானை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமனம் செய்திருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் மாகாணத்திற்கான பொலிஸ் அதிகாரத்தினை பிள்ளையானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் பிள்ளையானுக்கு எவ்வாறு வழங்குவது, அது தொடர்பில் முழுமையான அனுபவம் அற்றவர் என மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அதற்கு மாற்றீடாகவே வடக்கு மாகாண முதலமைச்சராக அரசியல் சட்டம் தொடர்பில் அனுபவம் பெற்ற இளைப்பாறிய நீதியரசரர் சி வி விக்கினேஷ்வரன் நியமிக்கப்பட்டார்.

ஆனால் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் எவ்வாறு எதிர்நீச்சல் போடவேண்டிய நிலை காணப்பட்டதோ அவ்வாறான போக்கினையே, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்து கொண்டு வந்த ஆட்சியிலும் சி வி விக்கினேஷ்வரன் கடைபிடித்து வருகின்றார்.

ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் மாகாணத்தில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் பொலிஸ் அதிகாரங்களை ஒப்படைப்பதில் எவ்வாறான நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றன என தெரியவில்லை.

இந்நிலையில் விக்கினேஷ்வரன் அதனை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கிழக்கின் முதலமைச்சர் தேர்வு இடம்பெற்றதன் பின்னரே வடக்கிற்கான முதலமைச்சர் தேர்வு இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
parliamentarian sumanthiran criticize northern province chief minister

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites