நாட்டில் தொடரும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்; 214 பேர் கொலை

0
473
Maligawatatte Shooting Woman underworld

2018 ஆம் ஆண்டிற்கான இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 214 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்ஞித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். (continue Shooting incidents Killed 214 people)

இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தினுள் குற்றங்கள் தீர்க்கும் சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளதோடு, நூற்றுக்கு 80 – 93 சதவீத்திற்கு இடையில் இருந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொது நிர்வாக முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் 26 பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான தரவுகள், 2015 ஆம் ஆண்டு 476 கொலைகள் இடம்பெற்றன. இவற்றில் 432 வழக்குகள் முடிவுற்றுள்ளன.

2016 ஆம் ஆண்டு 502 கொலைகள் இடம்பெற்றன. இவற்றில் 466 வழக்குகள் முடிவுற்றுள்ளன.

2017 ஆம் ஆண்டு 452 கொலைகள் இடம்பெற்ற நிலையில் இவற்றில் 402 வழக்குகள் முடிவுற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகளில் 184 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான அமைச்சர் ரஞ்ஞித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; continue Shooting incidents Killed 214 people