உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – தங்கப்பாதணியை சுவீகரிக்கும் வீரர் யார்…?

0
378
golden shoe football country competition world fifa news

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் போட்டிகளின் போது அதிகமான கோல்களை பெறும் வீரருக்கு தங்க பாதணி வழங்கப்படுவது வழமையாகும். golden shoe football country competition world fifa news

உலகின் சிறந்த வீரர்களான லியோன்ல் மெஸ்சி (அர்ஜென்டினா), சிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்) ஆகியோர் வாய்ப்பை இழந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டனர். இதில் ரொனால்டோ 4 கோல்கள் வரை அடித்துள்ளார்.

இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் 6 கோல் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இதனால் தங்கஷூ வாய்ப்பில் அவர் முன்னிலையில் இருக்கிறார். சுவீடனுக்கு எதிரான கால் இறுதியில் ஹாரிகேன் மேலும் கோல் அடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இங்கிலாந்து காலிறுதியில் தோற்றால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். லுகாகு (பெல்ஜியம்), கவானி (உருகுவே), எம்பாப்வே (பிரான்ஸ்), டெனிஸ் செர்சேவ், அர்டெம் டியாபா (ரஷியா) ஆகியோரும் அதற்கான போட்டியில் உள்ளனர். இதில் லுகாகு மட்டும் 4 கோல்கள் அடித்து உள்ளார். மற்றவர்கள் 3 கோல்கள் அடித்து உள்ளனர்.

நட்சத்திர வீரரான நெய்மர் (பிரேசில்), ஈடன் ஹசாட் (பெல்ஜியம்) ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்துள்ளனர்.

உலககோப்பையில் இதுவரை 56 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதுவரை 146 கோல்கள் அடிக்கப்பட்டு உள்ளன. ஒரு ஆட்டத்திற்கான சராசரி கோல் 2.6 ஆகும்.

அணிகளை பொறுத்தவரை பெல்ஜியம் அதிகபட்சமாக 12 கோல்கள் அடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

கடந்த இருமுறை கிரிஸ்டியானோ ரொனால்டோ தங்க பாதணியை சுவீகரித்து கொண்டார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இம்முறை கடந்த உலகக் கிண்ணத்தில் வழங்கிய பரிசுத் தொகையை விட வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை அதிகமாகும்.

கடந்த முறை பிரேசிலில் நடைபெற்ற 20வது உலகக் கிண்ணச் சாம்பியனுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்களே பரிசாக வழங்கப்பட்டது.

ஆனால் இம்முறை இது 38 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
golden shoe football country competition world fifa news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites