அழகு சாதன பொருட்களுடன் நபரொருவர் கைது

0
485
man arrested beauty products

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போலியான உலகப் பிரசித்தி பெற்ற அழகு சாதன பொருட்களான க்ரீம் மற்றும் பேஸ் வோஷ் ஆகிய பொருட்களை இறக்குமதி செய்து இலங்கையில் விநியோகித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (man arrested beauty products)

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான போலியான க்ரீம் மற்றும் பேஸ்வோஷ் ஆகிய பொருட்களுடன் குறித்த நபர் கைதுசெய்யபட்டுள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

நீண்ட விசாரணக்கு பின்னர் இந்தப் பொருட்களை விநியோகிக்கும் முக்கிய நபரையும் இறக்குமதி செய்யப்பட்ட போலியான பல ஆயுர்வேத அழகுசாதன உபகரண பொருட்களும் நீர்கொழும்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட போலியான வாசனை திரவியங்களும், போலியான பொருட்களும் சந்தேக நபர்களும் நீர்கொழும்பு மாவட்ட நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; man arrested beauty products