பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்

0
489
Two school students killed

தெவுந்தர ஹக்மன வீதியில் பிட்டவல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். (Two school students killed today morning accident)

இன்று காலை 6.45 மணியளவில் பஸ் வண்டி ஒன்றும் எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 19 வயதுடைய இரண்டு மாணவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Two school students killed today morning accident