அதிபர், ஆசிரியர் சங்கத்தின் வேலைநிறுத்ததை எதிர்த்த மலையக பாடசாலைகள்

0
539
upcountry schools work usually news Tamil

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று அறிவித்துள்ள நிலையில், மலையக பிரதேசத்தின் சில பாடசாலைகள் வழமை போல் இயங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். upcountry schools work usually news Tamil

அரசியல் பழிவாங்கல் என்ற ரீதியில் தகுதியற்ற 1200 பேருக்கு கல்வி துறையில் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளமைக்கு எதிராக நாடாளவீய ரீதியில் இன்று பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை ஒரு நாள் முடக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்றைய தினத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முடக்கிவிடக்கூடாது எனவும், வழமை போல் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கமைவாக ஏனைய பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிபகிஷ்கரிப்புகள் இடம்பெற்று வந்தாலும், நுவரெலியா மாவட்டத்தில் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. ஏனைய சில பாடசாலைகள் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக இருந்தது.

மாணவர்கள், ஆசிரியர்கள் என வழமையாக பாடசாலைக்கு இன்று சென்றுள்ளமையும், கல்வி நடவடிக்கைகள் வழமை போல் முன்னெடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளதென்பது குறிப்பிடதக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

upcountry schools work usually news Tamil,upcountry schools work usually news Tamil,upcountry schools work usually news Tamil