விஜயகலாவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரி அதிரடி உத்தரவு

0
893
Vijayakala Maheswaran statement maithripala sirisena

தமிழ் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் மகளீர்விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். (Vijayakala Maheswaran statement maithripala sirisena)

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி,

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பது கண்டனத்துக்குரியதாகும்.

எனவே உடனடியாக அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று “உத்தியோகபூர்வப் பணி” ஜனாதிபதி மக்கள்சேவை என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் 8 ஆவது நிகழ்வு யாழ் வீரசிங்கம்மண்டபத்தில் இடம்பெற்ற போதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளஉருவாக்க வேண்டும் தெரிவித்தார்.

சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உள்நாட்டலுவல்கள்அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஜே.சீ.அளவதுவள ஆகியோர் முன்னிலையிலேயே மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் இவ்வாறுகருத்து தெரிவித்திருந்தார்.

தமிழீழத்தில் அனைவரும் உயிருடன் வாழ, நிம்மதியாக வீதியில் நடக்க,பிள்ளைகள் நிம்மதியாக கல்வி கற்க மற்றும் பாடசாலைக்கு சுதந்திரமாக சென்று வீடுதிரும்ப வேண்டுமெனின் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கவேண்டும் என்றே அவர் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் சிங்கள ஊடகங்களிலும் பெரிதாக பேசப்பட்டு வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவயஅமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடென்றினை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Vijayakala Maheswaran statement maithripala sirisena,Vijayakala Maheswaran statement maithripala sirisena,Vijayakala Maheswaran statement maithripala sirisena,