உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்

0
896
Sexual intercourse Murder Grandmother 17 year old student arrested

தனது பாட்டியைக் கொலை செய்து, அவரின் உடலை வீட்டில் இருந்து 28 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பள்ளத்தில் வீசிய, 17 வயதுடைய உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவியையும் அவளின் காதலனையும் கடுகஸ்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். (Sexual intercourse Murder Grandmother 17 year old student arrested)

67 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் என்றும் இவரின் பிள்ளைகள் மணமுடித்து, தூர பிரதேசங்களில் வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடுகஸ்தோட்ட பிரதேசத்திலுள்ள தனது இல்லத்தில் தனிமையில் வசிக்கும் இந்த வயோதிபப் பெண், பொலன்நறுவை பிரதேசத்தில் வசிக்கும் தனது மூத்த மகளின் மகளை தனது துணைக்காக அழைத்து வந்து, கடுகஸ்தோட்ட நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த மாணவி கடந்த 25 ஆம் திகதி தனது பாட்டியை காணவில்லை என தனது தாயாருக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

தெல்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் உயிரிழந்தவரின் மகள், கடுகஸ்தோட்ட பொலிஸாருக்கு இதுகுறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்தவரின் பேத்தியையும் அம்பிடிய பிரதேசத்தில் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் இவளின் காதலனான மாணவன் ஒருவனையும் பொலிஸார் கைது செய்த போது இந்த கொலை தொடர்பாக பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

கடந்த 24 ஆம் திகதி இரவு 9 மணியளவில் தனது காதலனை திருட்டுத்தனமாக தனது அறைக்கு வரவழைத்து இருவரும் இரவை சந்தோசமாக கழித்துள்ளனர். காலையில் தனது பேத்தியான மாணவி தனது காதலனுடன் சந்தோஷமாக அறையில் இருப்பதை பாட்டி கண்டுள்ளார்.

இதன்போது, மாணவி மற்றும் அவரின் காதலனோடு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, தடியொன்றினால் பாட்டியைத் தாக்கியுள்ளதோடு, பாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தனது பாட்டியின் உடலை கட்டில் அடியில் ஒளித்து வைத்து விட்டு, இரவில் வாடகை கார் ஒன்றில் பாட்டியின் உடலை எடுத்து கலஹா, ஹந்தானை மலை பிரதேசத்திற்கு கொண்டுசென்று மலையில் இருந்து கிழே தள்ளிவிட்டுள்ளனர்.

பாட்டி அணிந்திருந்த ஆடைகளை கண்டி நகரிலுள்ள குப்பையில் போட்டுள்ளனர். பொலிஸார் இந்த தகவல்களை 4 நாட்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த மாணவியையும் அவளின் காதலனையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sexual intercourse Murder Grandmother 17 year old student arrested