மன்னாரில் நாளை முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

0
400
6 year old girl molested murdered Protest demonstration Mannar

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் அமைதிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. (6 year old girl molested murdered Protest demonstration Mannar)

அத்துடன், நாடு முழுவதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை எதிர்த்தும் நாளை காலை 9 மணியளவில் முருங்கன் பஸ் தரிப்பிடத்தில் அமைதி பேரணி இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் மன்னார் மாவட்ட ரீதியில் முழுக் கடையடைப்பை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த அமைதி பேரணி மற்றும் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சுழிபுரம் பகுதியில் 06 வயதுடைய மாணவியான றெஜீனா கழுத்து நெறிக்கப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 6 year old girl molested murdered Protest demonstration Mannar