யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு

0
1275
 jaffna Vaddukoddai Sangaraththai incident

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நுழைந்த திருடர்கள் கணவனை கட்டிவைத்து விட்டு, கணவன் கண் முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.( jaffna Vaddukoddai Sangaraththai incident )

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள்ள நேற்று அதிகாலை ஒரு மணியளவில் திருடர்கள் இருவர் நுழைந்துள்ளார்கள்.

அந்த வீட்டினுள் கணவனும் மனைவியும் உறங்கி கொண்டிருந்துள்ளனர்.

வீட்டினுள் நுழைந்த திருடர்கள் முதலில் கணவனை கடுமையாக தாக்கியுள்ளதுடன் வாய் மற்றும் கைகளை கட்டி கதிரையுடன் சேர்த்து கட்டி வைத்துள்ளனர்.

பின்னர் மனைவியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை அபகரித்துள்ளனர்.
மனைவியின் கால்களை கட்டி வைத்து கணவனின் கண் எதிரே அவரை கொடூரமான முறையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதனையடுத்து பெண்ணின் உடல் உறுப்புக்களை கத்தியால் வெட்டி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அதேவேளை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 59 வயதுடைய குடும்ப பெண் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது உடல் நிலையை பரிசோதித்தமை மற்றும் அவரிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் நோக்கினால் வன்புணர்ந்தவர்கள் , போதை பொருள் பாவித்து இருக்கலாம் எனும் சந்தேகம் எழுகின்றது.

மிருகதனமாகவே வன்புணர்ந்துள்ளார்கள் என வைத்திய சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

கடந்த வாரம் பாடசாலை சென்ற சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் இடம்பெற்று அதற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மீளவும், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tags: jaffna Vaddukoddai Sangaraththai incident , jaffna Vaddukoddai Sangaraththai incident , jaffna Vaddukoddai Sangaraththai incident ,