அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் வெளியேறினால் வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரனின் அணியோ பொம்பான்மை பலத்தினை பெறமுடியாத நிலை ஏற்படுவதோடு, தமிழரின் பேரம்பேசும் பலமும் வெகுவாக குறைந்து விடும்.

அவ்வாறு குறைகின்றபோது உரிமைகளை வென்றெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மோசமான நிலையை அடைந்து விடும் என்பது தமிழ்த் தேசிய அரசியல் அவதானிகளின் கருத்தாகவுள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபைக்கு மீண்டும் விக்னேஸ்வரனை களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவதற்கு தயாராகவுள்ளேன் என அறிவித்துள்ள இலங்கை தமிழரசுக்  கட்சியின் தலைவர்  மாவை.சேனாதிராஜா அம் முடிவிலிருந்து பின்வாங்கி விடக்கூடாது என்று அவருக்கு ஆதரவான அணி‍யொன்றும் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- Tamil’s bargaining strength depends Tamil National Alliance
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை