மாகாண சபைத் தேர்தல் – விசேட விவாதம் ஜுலை மாதம் இடம்பெறும்

0
271
tamilnews provincial council election hope next january

(efforts made conduct provincial council elections mahinda desapriya)
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலை தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை தயாரித்த பின்னர் மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்றது.

இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல் ஆணையாளர் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

தேர்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலை பழைய மற்றும் புதிய முறைகளின் கீழ் நடத்துவது பற்றியும், எல்லை நிர்ணயம் தொடர்பாகவும், இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

(efforts made conduct provincial council elections mahinda desapriya)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites