முல்லைத்தீவில் காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

0
379
Mullaitivu Puthuvettuvavan reported missing dead body recovered

(Mullaitivu Puthuvettuvavan reported missing dead body recovered)

முல்லைத்தீவு, புத்துவெட்டுவானில் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்பட்ட முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்துவெட்டுவான், இடுகாட்டுப் பகுதியில் வைத்தே குறித்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

81 வயதான வீரகத்தி சோமசுந்தரம் என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 23 ஆம் திகதி அதிகாலையில் இருந்து, குறித்த முதியவரைக் காணவில்லை என ஐயன்கன் குளம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டார்.

(Mullaitivu Puthuvettuvavan reported missing dead body recovered)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites