பாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை!

0
1754

மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு கடைசியில் இறுதி சுற்றுக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். (Miss India 2018 Winner Tamil nadu Contestant)இந்தப் போட்டியின் இறுதியில் சென்னையைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்தெடுக்கப்பட்டார். அவருக்கு 2017-ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் மற்றும் உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லார் மகுடம் சூட்டினார். 19 வயதான அனுகீர்த்தி சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார்.இந்த போட்டியில் அரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரி இரண்டாம் இடத்தையும் ஆந்திராவைச் சேர்ந்த ஷ்ரேயா ராவ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்திய அழகி பட்டத்தை வென்று உலக அழகி போட்டிக்கு செல்லும் அனு கீர்த்திக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tag: Miss India 2018 Winner Tamil nadu Contestant