உதவி செய்ய வந்த அமெரிக்க பெண்களுக்கு திருகோணமலையில் நடந்த சம்பவம் : ஒருவர் கைது

0
3359
person arrested usns mercy ship sexula abuse

(person arrested usns mercy ship sexula abuse)
திருகோணமலைக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனையில் மருத்துவ சேவை செய்யும் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசுபிக் ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ், 1000 படுக்கைகள், 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்கள், அதிநவீன பரிசோதனை வசதிகளைக் கொண்ட அமெரிக்க கடற்படையின், USNS Mercy என்ற மிதக்கும் மருத்துவமனை கடந்த மாதம் 25ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த மிதக்கும் மருத்துமவனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் கடற்படையினர், திருகோணமலைப் பகுதியில் மருத்துவ உதவிகள், பொதுப்பணிகளில் ஈடுபட்டனர்.

குறித்த கப்பலின் கடற்படையைச் சேர்ந்த இரு பெண்கள் திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக குளிர்பானம் எடுத்துக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்ற ஹோட்டல் பணியாளர் ஒருவர் குறித்த இரு பெண்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த பெண்கள் சம்பவம் ஹோட்டல் நிர்வாகத்துக்கு முறைப்பாடு செய்து பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையின் பின்னர் முல்லைத்தீவைச் சேர்ந்த சந்தேக நபரை உப்புவெளிப் பொலிசார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை