ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்கு தடை.!

0
371
black dress banned

(black dress banned)

 

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடை அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். மாணவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பட்டம் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், ஜனாதிபதி நிகழ்ச்சியில் கறுப்பு ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியை ஒருவர் அணிந்து சென்ற கறுப்பு துப்பட்டாவை அகற்றுமாறு தமிழக பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழகத்தில் கறுப்புக்கொடி காட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கறுப்புக்கொடி காட்டி வருகின்றன.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(black dress banned)

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here